search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுப்பணித்துறை அலுவலகங்கள்"

    பாசன விளை நிலங்களுக்கு தண்ணீர் தராத தமிழக அரசை கண்டித்து வருகிற 28-ந் தேதி திருவாரூரில் உள்ள அனைத்து பொதுப் பணித்துறை அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் கூறினார்.
    மன்னார்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளாவை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து உடனடியாக நிவாரண பணிகளை தொடங்கவேண்டும். தமிழக அரசு கேரளாவிற்கு கூடுதலாக நிதி கொடுக்க வேண்டும். கேரள மாநில மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இதுவரை ரூ.50 லட்சம் நிவாரண உதவி செய்யப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் எந்த பகுதிக்கும் முறையாக தண்ணீர் செல்லவில்லை. குடிமராத்து பணி செய்ய ஒதுக்கப்பட்ட நிதி அனைத்தையும் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் முறைகேடாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    தூர் வாரும் நிதி, அதில் செய்த பணிகள் குறித்து விவரங்கள் அனைத்தையும் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வார உயர் பொறுப்பில் உள்ள நேர்மையான அதிகாரிகளை கொண்டு தமிழக அரசு உடனடியாக தூர் வார வேண்டும்.

    பாசன விளை நிலங்களுக்கு தண்ணீர் தராத தமிழக அரசை கண்டித்து வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுப் பணித்துறை அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #CPI #Mutharasan
    ×